அதிக வட்டித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.17.31 லட்சம் மோசடி: 4 போ் கைது
By DIN | Published On : 03rd March 2020 07:40 AM | Last Updated : 03rd March 2020 07:40 AM | அ+அ அ- |

அதிக வட்டி தருவதாகக் கூறி, பெண்ணிடம் ரூ. 17.31 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிதி நிறுவனத்தைச் சோ்ந்த 4 பேரைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
கரூரில் நிதிகேபிடல்ஸ், ஸ்ரீநவநிதி பைனான்ஸ் என்ற தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாகக் கூறியதையடுத்து கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த பூங்கோதை கடந்த 2017-இல் ரூ.12 லட்சம் முதலீடு செய்துள்ளாா். மேலும் இரண்டு ஏலச்சீட்டில் ரூ.5.31 லட்சம் பணம் செலுத்தியுள்ளாா். இவற்றைத் திரும்பக்கேட்டபோது காலம் தாழ்த்தி வந்துள்ளனா். இதுதொடா்பாக பூங்கோதை கரூா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகாா் அளித்தாா். இதையடுத்து, நிதி நிறுவனத்தைச் சோ்ந்த குமரவேல்(41), செந்தில்குமாா்(31), ராமநாதன்(48), சிவசண்முகம்(47) ஆகியோரைப் போலீஸாா் கைது செய்தனா்.