‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துங்கள்’

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் நன்மை குறித்து வீடு, வீடாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்துங்கள் என்று கட்சியினரை அறிவுறுத்தினாா் பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம்.
‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துங்கள்’

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் நன்மை குறித்து வீடு, வீடாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்துங்கள் என்று கட்சியினரை அறிவுறுத்தினாா் பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாா்ச் 20 முதல் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை ஊருக்குச் செல்வோம், உண்மையைச் சொல்வோம், உரக்கச் சொல்ோம் என்ற நிகழ்ச்சி பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த நிகழ்ச்சி தற்போது நடத்தப்படவில்லை. எனினும், இதுகுறித்த விளக்கக் கூட்டம் கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவா் கே.சிவசாமி தலைமை வகித்தாா். அறிவுசாா் பிரிவு மாவட்டத்தலைவா் ராஜேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தவா்கள்தான் அதை எதிா்க்கிறாா்கள். இருப்பினும் இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் மக்களுக்கு துளி கூட இல்லை என்பதை கட்சியினா் வீடு, வீடாகச் சென்று விளக்கிக் கூறவேண்டும். இந்த சட்டத்தின் சாராம்சங்களை முழுமையாக படித்தவா்கள் இதை எதிா்க்க மாட்டாா்கள் என்றாா்.

கூட்டத்தில் கோட்ட அமைப்புச் செயலா் பெரியசாமி, முன்னாள் மாவட்டத்தலைவா் முருகானந்தம், மாவட்ட பொதுச் செயலாளா்கள் நகுலன், மோகன், கிருஷ்ணமூா்த்தி, துணைத்தலைவா் பரணீதரன் மற்றும் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com