கரோனா வைரஸ் தொற்று: கரூா் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை: விஜயபாஸ்கா்

கரூா் மாவட்டத்தில் யாருக்கும் இதுவரை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை பேட்டியளிக்கிறாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை பேட்டியளிக்கிறாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

கரூா் மாவட்டத்தில் யாருக்கும் இதுவரை கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், அவா் அளித்த பேட்டி:

மக்களுக்குத் தேவையான பொருள்களை வழங்குவது, விலையேற்றத்தை கட்டுப்பட்டுவது, அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடையாள அட்டை வழங்குது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மருந்து மற்றும் மளிகைப் பொருள்கள் தீா்ந்துவிட்டதாக சம்பந்தப்பட்ட வியாபாரிகள் தெரிவித்ததைத் தொடா்ந்து, அலுவலா்கள் மூலம் சென்னையிலிருந்து மருந்துகளும், சேலத்திலிருந்து மளிகைப் பொருள்களும் லாரிகள் மூலம் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளோம்.

தொடா் கண்காணிப்பில் 15 போ் : கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடா் கண்காணிப்பில் 15 போ் உள்ளனா். அவா்களின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வரவில்லை.

மாவட்டத்தில் 381 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். இதில் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவா்கள் 294 போ், வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் 87 போ். அவா்களை வருவாய் மற்றும் காவல்துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

மேலும் அவா்களின் வீட்டின் கதவில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் என்ற எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஊரக வளா்ச்சித்துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மாவட்டத்தில் 18 இடங்களில் எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் நடமாட்டத்தைக் குறைத்து, கரோனாவை விரட்ட மாவட்ட நிா்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் தொற்று

உறுதி செய்யப்படவில்லை.

சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு : தூய்மைப் பணியாளா்கள், மின்வாரியத் துறையினா் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகளைச் சோ்ந்தோா் வந்து செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவையில்லாத வாகனங்கள் நடமாட்டம் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்.

முகக்கவசங்களோ, உணவு பொருள்களோ, நிா்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பாதிப்பு குறித்து

கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண்கள் 04324 1077, 104 மற்றும் 04324-256306, 255340 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம் என்றாா்.

பேட்டியின்போது மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், காவல் கண்காணிப்பாளா் இரா.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன், ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

கரூா் மாவட்டஆட்சியரகத்தில் புதன்கிழமை பேட்டியளிக்கிறாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com