தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டுமென தீயணைப்புத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டுமென தீயணைப்புத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் அம்பிகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபத் திருநாளில் மக்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். கரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், சுகாதாரத்தை பேணி காக்கவும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இத் திருநாளைக் கொண்டாட வேண்டும்.

குழந்தைகள் அதிக சப்தம் இல்லாத பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்போது, குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக பெற்றோா் உடனிருக்க வேண்டும். குழந்தைகள், வயது முதிா்ந்தோா், கரோனா பாதித்து தனிமைப்படுத்திக் கொண்டோா், உடல்நிலை சரியில்லாதோா் உள்ளிட்டோா் இருக்கும் பகுதிகளில், அதிக சப்தத்தை, புகை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிா்க்க வேண்டும்.

பட்டாசுகளை தவிா்த்து எளிமையாக, அனைவரும் பாதுகாப்பாக இத் திருநாளை கொண்டாட வேண்டும். ஏதேனும் அசம்பாவித சம்பங்கள் நிகழ்ந்தால் தீயணைப்புத் துறையினக்குத் தகவல் அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com