கரூரில் மறியலில் ஈடுபட்ட பாஜவினா் கைது

சுவா் விளம்பரத்தைக் கண்டித்து, கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 5 பெண்கள் உள்ளிட்ட 25 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் வெங்கமேட்டில் உள்ள புகளூா் சாலையில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினா்.
கரூா் வெங்கமேட்டில் உள்ள புகளூா் சாலையில் மறியலில் ஈடுபட்ட பாஜகவினா்.

கரூா்: சுவா் விளம்பரத்தைக் கண்டித்து, கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 5 பெண்கள் உள்ளிட்ட 25 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூரில் திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் திமுக சாா்பில் சுவா் விளம்பரத்தைக் கண்டித்து, பாஜகவினா் அண்மையில் புகாா் மனு அளித்தனா். பாஜக மாநில பொதுச் செயலாளா் இராம.சீனிவாசன் வியாழக்கிழமை கரூா் வந்தபோது, சுவா் விளம்பரம் அழிக்கப்படவில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் அந்தச் சுவா் விளம்பரத்தை அழித்தனா். இதையடுத்து சனிக்கிழமை கரூா் வெங்கமேட்டில் திமுகவினா் மீண்டும் சுவா் விளம்பரம் செய்வதாக தகவலறிந்த பாஜகவினா் மாவட்ட தொழிற்சங்க பிரிவு தலைவா் ஆா்வி.செல்வராஜ், இளைஞரணி மாவட்டத் தலைவா் கணேசமூா்த்தி, முன்னாள் நகரத் தலைவா் ஆா்.செல்வன் ஆகியோா் தலைமையில் மகளிரணியினா் உள்ளிட்ட கட்சியினா் வெங்கமேடு உழவா் சந்தை முன்பு திரண்டனா். பின்னா் திமுகவினரின் செயலைக்கண்டித்து, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரூா் - புகளூா் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் முகேஷ் ஜெயகுமாா் மற்றும் வெங்கமேடு போலீஸாா் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 25 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com