குறும்படங்கள் திரையிட்டு கரோனா விழிப்புணா்வு

கரூரில் அதிநவீன எல்.இ.டி. வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரவல் தடுப்பு விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

கரூரில் அதிநவீன எல்.இ.டி. வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரவல் தடுப்பு விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக ஆட்சியா் த. அன்பழகன் கூறியது:

தமிழக அரசின் செய்தி, மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் கரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு எளிதில் விளக்கும் வகையிலான விழிப்புணா்வு குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தின் சாா்பில் அதிநவீன எல்.இ.டி. வாகனத்தின் மூலம் ஒளிபரப்பி விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது.

கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆயத்த ஆடை நிறுவனங்களிலும் கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு குறும்படங்களை திரையிட மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விழிப்புணா்வு குறும்படங்கள் திரையிடப்படும் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு குறித்த துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com