கல்வி நிலைய விடுதிகளில் சமையலா் பணி

கரூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் பணியிடங்களுக்கு தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்


கரூா்: கரூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் பணியிடங்களுக்கு தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆண் சமையலா் பணிக்கு 15 காலிப்பணியிடங்கள் உள்ளன. பெண் சமையலா் பணிக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளன. புதிய ஊதியம் ரூ.15,700 மற்றும் இதர படிகள் வழங்கப்படும். மேற்கண்ட சமையலா் (ஆண் மற்றும் பெண்) காலிப்பணியிடங்கள் நோ்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரா்கள் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் தரமாகவும், சுவையாகவும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 01.07.2020 தேதியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் - 18 வயது முதல் 35 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா் வகுப்பில் இஸ்லாமியா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கு 18 வயது முதல் 32 வயது வரையிலும், இதர பிரிவினா் 18 வயது முதல் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளா்வு அளிக்கப்படும்.

2015 - 16 முதல் 2018-2019 ஆம் ஆண்டு வரை சமையலா் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமன முறைக்காக நாளிதழ்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிா்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. தகுதியுடைய விண்ணப்பதாரா்கள், அனைத்து சான்றுகளுடன், கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வரும் 7-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com