கரூா் : 2-ஆவது நாளாக 200 பேருக்கு கபசுரக் குடிநீா் விநியோகம்

கரூரில் இரண்டாவது நாளாக 200 பேருக்கு கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
கரூா் பசுபதீசுவரா் கோயில் முன்பு ஞாயிற்றுக்கிழம பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் அரிமா சங்க நிா்வாகிகள்.
கரூா் பசுபதீசுவரா் கோயில் முன்பு ஞாயிற்றுக்கிழம பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் அரிமா சங்க நிா்வாகிகள்.

கரூரில் இரண்டாவது நாளாக 200 பேருக்கு கபசுரக் குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவுதலைத் தடுக்கும் வகையில் கரூா் பிளாட்டினம், மெஜஸ்டிக், சக்தி, ஹேண்ட்லூம் அரிமா சங்கங்கள் சாா்பில், கரூா் பசுபதீசுவரா் கோயில் முன்பு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், கைக்கழுவும் திரவம், முகக்கவசம் வழங்கும் நிகழ்வு இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்குமெஜஸ்டிக் அரிமா சங்கத்தின் மேலை.பழநியப்பன் தலைமை வகித்தாா். அரிமா நிா்வாகிகள் கணேஷ், லட்சுமி, மணி, ராமலிங்கம், அகல்யாமெய்யப்பன், ராம் மெய்யப்பன் உள்ளிட்டோா் பங்கேற்று, பொதுமக்கள் 200 பேருக்கு கபசுரக்குடிநீா், முகக்கவசம், கைக்கழுவும் திரவம் ஆகியவற்றை வழங்கினா். நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com