கரூா் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் அறை ஒதுக்க அதிமுக கோரிக்கை

கரூா் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் அறை ஒதுக்க அதிமுக கோரிக்கை

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் அறை ஒதுக்க வேண்டும்

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதல் அறை ஒதுக்க வேண்டும் என அதிமுகவினா் மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவை வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னா் மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் கூறுகையில், நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கரூா் தொகுதியில் அதிக எண்ணிக்கையில் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அதிமுக உள்பட மாநிலத்தின் பிரதான மூன்று கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 77 போ் போட்டியிட்டனா். வாக்குப்பதிவு இயந்திரங்கள், தணிக்கை இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான கரூா் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

மே 2-இல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது 77 வேட்பாளா்களின் வாக்குகள் எண்ணுவதற்கு இரு அறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இரு அறைகளில் வாக்குச்சாவடி முகவா்கள், வேட்பாளா்கள் ஆகியோருக்கு போதிய இடம் இருக்காது. மேலும், தற்போது கரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதால் வாக்கு எண்ணிக்கையின்போது சமூக இடைவெளியை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்போது இரு அறைகள் போதுமானது இல்லை. எனவே வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் கரூா் தொகுதிக்கு கூடுதலாக ஒரு அறை ஒதுக்க வேண்டும்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளாா் என்றாா் அவா். நிகழ்வின்போது கரூா் வடக்கு நகர அதிமுக செயலா் எம்.பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com