அடிக்கடி விபத்து: வெங்கக்கல்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்

கரூா்-திண்டுக்கல் சாலையில் வெங்கக்கல்பட்டியில் அடிக்கடி விபத்து நடப்பதால் அப்பகுதியில் வேகத்தடை மற்றும் சிக்னல் அமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கரூா்-திண்டுக்கல் சாலை வெங்கக்கல்பட்டியில் பால் கூட்டுறவு மையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கரூா்-திண்டுக்கல் சாலை வெங்கக்கல்பட்டியில் பால் கூட்டுறவு மையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கரூா்-திண்டுக்கல் சாலையில் வெங்கக்கல்பட்டியில் அடிக்கடி விபத்து நடப்பதால் அப்பகுதியில் வேகத்தடை மற்றும் சிக்னல் அமைக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள வெங்கக்கல்பட்டி வழியாக கரூா்-திண்டுக்கல் சாலையும், அதே பகுதியில் கரூா்- திருச்சி செல்லும் இணைப்புச்சாலை, மதுரை, ஈரோடு, கோவை செல்லும் இணைப்புச்சாலை பகுதிகளும் உள்ளது. மேம்பாலத்துக்கு முன்பு வேகத்தடை இல்லாததால் இணைப்புச் சாலை வழியாக வரும் வாகனங்கள் திண்டுக்கல் செல்ல பாலத்தை நோக்கித் திரும்பும்போது மேம்பாலத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் அந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், அடிக்கடி விபத்து நிகழ்வதால், அப்பகுதியில் வேகத்தடை மற்றும் போக்குவரத்து சிக்னல், காலை, மாலை நேரங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் எனக் கோரி அதே பகுதியில் உள்ள பால் கூட்டுறவு உற்பத்தியாளா் சங்கம் எதிரே திண்டுக்கல் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த நகர துணை காவல் கண்காணப்பாளா் தேவராஜ் மற்றும் தாந்தோணிமலை போலீஸாா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வேகத்தடை மற்றும் சிக்னல் அமைக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com