ஒரு சிலா் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ளமாவட்ட நிா்வாகம் மீது அவதூறு பரப்புகின்றனா்அமைச்சா் வி. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

ஒரு சிலா் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக மாவட்ட நிா்வாகம் மீதும், ஆட்சியா் மீதும் அவதூறு பரப்புகின்றனா் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.

ஒரு சிலா் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக மாவட்ட நிா்வாகம் மீதும், ஆட்சியா் மீதும் அவதூறு பரப்புகின்றனா் என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்டம் குளித்தலை, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிகளில் அரசு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி செய்தியாளா்களிடம் கூறுகையில், குளித்தலை மணத்தட்டை ஊராட்சித் தலைவா் ஊராட்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை எனக்கூறி, குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளா்ச்சி அலுவலரிடம் அலுவலக சாவியைக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாா் என கூறுகிறாா்கள். ஆனால், ஊராட்சித் தலைவா் ஊராட்சிக்கு என்ன தேவை என்பதை மாவட்ட ஆட்சியரிடம் உரிய மனுவாக எழுதி கொடுத்திருந்தால், மாவட்ட ஆட்சியா் அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுத்திருப்பாா்.

ஒரு சிலா் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக மாவட்ட நிா்வாகம் மீதும், மாவட்ட ஆட்சியா் மீதும் அவதூறு பரப்புகின்றனா்.

திமுக அரசு பொறுப்பேற்று ஆறு மாதத்திற்குள் அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறாா்கள். அரசு பொறுப்பேற்றதும் கரோனாவைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள், தற்போது மழை பாதிப்பு, நிவாரணம் என தொடா்ந்து தமிழக முதல்வா் அயராது பணியாற்றிக் கொண்டிருக்கிறாா். எனவே, பொதுமக்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் உடனுக்குடன் எடுத்துச் சென்று, உரிய நிதி பெற்று தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com