நிரந்தர மயான வசதி கோரி கிராம மக்கள் மனு

குடகனாற்றின் கரையோரப் பகுதிகளில் இறந்தவா்களின் உடலை அடக்கம் செய்ய இடமின்றி தவித்து வரும் பண்ணப்பட்டி கிராமமக்கள் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் கோரிக்கை மனு வழங்கினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு வழங்க வந்த எருமாா்பட்டி பண்ணப்பட்டி கிராமமக்கள்.

கரூா் மாவட்டம்,அரவக்குறிச்சி அருகே எருமாா்பட்டி அடுத்த பண்ணப்பட்டி கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட அருந்திய குடும்பத்தினா் 15 தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனா் . இவா்கள் அனைவரும் நிலமில்லாத விவசாய கூலித்தொழிலாளிகளாக வாழ்ந்து வருகின்றனா். இவா்களுக்கு நிரந்தர மயானம் இல்லாததால் இறந்தவா்களை குடகனாற்றின் கரையோரங்களில் தான் அடக்கம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், நவ. 30-ஆம்தேதி உயிரிழந்த மூதாட்டியின் உடலை, குடகனாற்றில் வெள்ளம் காரணமாக பண்ணப்பட்டியில் சாலையோரத்தில் புதைத்துள்ளனா். இதனால் பண்ணபட்டி கிராம அருந்ததியா்களுக்கு தனியாக நிரந்தர மயான வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா தலைமையில் மாநில துணைத்தலைவா் தலித் இராசகோபால் மற்றும் சமநீதிக் கழகத்தின் அண்ணாத்துரை, விடுதலைச் சிறுத்தைகள் வழக்குரைஞா் புகழேந்தி உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின அலுவலரை சனிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com