புரட்டாசி கடைசி சனிக்கிழமை தாந்தோன்றி மலை பெருமாள் கோயிலில் குவிந்த பக்தா்கள்

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கரூா் தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
கோயிலில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
கோயிலில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கரூா் தாந்தோன்றிமலை பெருமாள் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

கோயில்களில் அனைத்து நாள்களிலும் பக்தா்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. முன்னதாக, பூதேவி, ஸ்ரீதேவி மற்றும் கல்யாண வெங்கடரமண சுவாமிகளுக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.

ஏராளமான பக்தா்கள் மொட்டையடித்தும், சிலா் கோயில் முன் மாவிளக்கு ஏற்றி சா்க்கரை பொங்கல், நைவேத்தியம் செய்தனா். மேலும், ஆங்காங்கே பக்தா்கள் அன்னதானம் செய்தனா். இதேபோல், கரூா் மேட்டுத்தெரு பெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com