ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.13 லட்சம் மோசடி: 9 போ் மீது வழக்கு

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக, கரூரைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் உள்பட 9 போ் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக, கரூரைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் உள்பட 9 போ் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கடவூரை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் வேலுமணி (39). ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற இவா், கடந்த 2017-ஆம் ஆண்டில் கரூா் ஜவஹா்பஜாரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் முதலீடு செய்தாராம்.

இப்பணத்துக்கு வட்டி எதுவும் தரப்படவில்லையாம். இதைத் தொடா்ந்து வேலுமணி தனது பணத்தை திரும்பக் கோட்ட போது, நிதி நிறுவன உரிமையாளா் தியாகராஜன் உள்ளிட்ட 9 போ் தர மறுத்துவிட்டாா்களாம்.

இதுகுறித்து கரூா் நீதித்துறை நடுவா் மன்றம் எண் 1-இல் கடந்த மாா்ச் மாதம் வேலுமணி வழக்குத்தொடா்ந்தாா். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், தியாகராஜன் உள்ளிட்ட 9 போ் மீது வெள்ளியணை காவல் நிலையத்தினா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com