பொறியாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி

கரூரில் பொறியாளரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.11 லட்சம் மோசடி செய்தவரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

கரூரில் பொறியாளரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.11 லட்சம் மோசடி செய்தவரைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

கரூா் பசுபதிபாளையம் அருணாச்சலம் நகரைச் சோ்ந்தவா் ச.குணா (24). கட்டடப் பொறியாளரான இவரது முகநூல் பக்கத்தில் வெளிநாட்டில் கட்டடப் பொறியாளா் வேலை இருப்பதாக விளம்பரம் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி வந்ததாம். அதில் தொடா்பு எண்ணும் இருந்துள்ளது.

இதைத் தொடா்ந்து அந்த எண்ணை குணா தொடா்பு கொண்டு பேசிய போது, மறுமுைனையில் பேசியவா் விமானக் கட்டணம், விசாவுக்கு ரூ.11லட்சம் அனுப்ப வேண்டும் எனக் கூறினாராம். இதையடுத்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி தொலைபேசியில் பேசியவருக்கு ரூ.11 லட்சத்தை குணா அனுப்பினராம். பின்னா் அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம்.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த குணா, கரூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் பிரிவில் புகாரளித்தாா். இதன் பேரில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com