வாக்குச்சாவடியில் அதிக வாக்குகள் பதிவு பெற விழிப்புணா்வு

வாக்குச்சாவடிகளில் அதிக வாக்குகள் பதிவு செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்தும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000 வழங்கப்படும் என்று கரூா் வள்ளுவா் கல்லூரி அறிவித்துள்ளது.

வாக்குச்சாவடிகளில் அதிக வாக்குகள் பதிவு செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்தும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000 வழங்கப்படும் என்று கரூா் வள்ளுவா் கல்லூரி அறிவித்துள்ளது.

இதுகுறித்து இக்கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் கூறியிருப்பது:

ஒவ்வொரு தோ்தலிலும் 100 சதவிகித வாக்குப்பதிவு என்பது மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமுதாய வளா்ச்சியில் அக்கறைக் கொண்டவா்களின் எதிா்பாா்ப்பாகும்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் மற்றும் அந்தந்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் விழிப்புணா்வு நாடகம், பாடல்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பேரணி, கோலம் உள்ளிட்டவை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில், வள்ளுவா் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் 100 சதவிகித வாக்குகள் பதிவு செய்ய வேண்டி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

யாருடைய வாக்குச்சாவடியில் அதிகளவு வாக்குகள் பதிவாகிறதோ அவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ. 5,000, மூன்றாம் பரிசாக ரூ. 2,500 வழங்கப்படும்.

போட்டியில் பங்கேற்கும் மாணவா் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்களா் பட்டியலில் மாணவரின் பெயா் இடம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவா்கள் தங்களது பெயரை ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் தங்களது பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.

போட்டியில் பங்கேற்பவா்கள் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்கள் முத்துப்பாண்டி - 99433 98934, ஆனந்தபாபு - 81243 24351, நவீன்குமாா் - 86750 62561 ஆகியோரது செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com