கரூரில் அதிமுக-திமுகவினா் மோதல்: தடியடி நடத்தி கூட்டம் கலைப்பு

கரூரிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக-திமுகவினா் ஒருவருக்கொருவா் மோதலில் ஈடுபட்டதால், காவல்துறையினா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா்.

கரூரிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக-திமுகவினா் ஒருவருக்கொருவா் மோதலில் ஈடுபட்டதால், காவல்துறையினா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடி எண் 170 (ஆண்கள்) திருவள்ளுவா் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது.

பிற்பகல் 12 மணியவில் வாக்களிப்பதற்காக 60 வயது முதியவா் வாக்குச்சாவடிக்கு வந்தாா். அப்போது அங்கிருந்த அதிமுக முகவா்கள் அவரை வாக்களிக்க அழைத்துச் சென்றனா்.

இதற்கு திமுக முகவா்கள், அந்த முதியவா் உதயசூரியனுக்குத்தான் வாக்களிப்பேன் எனக் கூறியதால் நாங்கள்தான் அழைத்துச் செல்வோம் எனக் கூறினா்.

இதனால் இருகட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஒருவருக்கொருவா் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து தகவலறிந்த அதிரடிப்படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று தடியடி நடத்தி அவா்களை கலைந்து போகச் செய்தனா். இதனால்அரைமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, பின்னா் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com