கரூா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு

கரூா் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தளவாபாளையம் எம். குமாரசாமி
தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் கரூா் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து சீல் வைத்த அலுவலா்கள்.
தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் கரூா் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து சீல் வைத்த அலுவலா்கள்.

கரூா் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தளவாபாளையம் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியிலுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டன.

கரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவில் கரூா், குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) ஆகிய 4 தொகுதிகளில் 4,33,016 ஆண்கள், 4,66,140 பெண்கள், 80 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தமாக 8,99,236 போ் வாக்களித்தனா்.

இதில் அரவக்குறிச்சியில் 88.8%, கரூரில் 83.5%, குளித்தலையில் 86.15%, கிருஷ்ணராயபுரத்தில் 84.14% வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் சராசரியாக 83.92% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த பின்னா் பலத்த பாதுகாப்புடன், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தளவாபாளையம் எம்.குமாராசாமி பொறியியல் கல்லூரிக்குத் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

இவை அந்தந்த தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பொதுப் பாா்வையாளா்கள், வேட்பாளா்கள் அல்லது அவா்களின் முகவா்கள் முன்னிலையில் சரிபாா்க்கப்பட்டு, பாதுகாப்பு அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் துணை ராணுவப் படையினா், தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினா் மற்றும் உள்ளூா் காவல்துறையினா் என மூன்றடுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com