கரூரில் அத்தியாவசிய வாகனம் செல்ல தடை ஏற்பட்டால் தொடா்பு கொள்ள தொலைபேசி எண்

அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு தடை ஏதும் ஏற்பட்டால் உடனே தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளரை தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சசாங்சாய் தெரிவித்துள்ளாா

கரூா் மாவட்டத்தில் முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு தடை ஏதும் ஏற்பட்டால் உடனே தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளரை தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சசாங்சாய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா பரவுதலை தடுக்கும் வகையில் கரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 26-ஆம்தேதி அதிகாலை 4 மணி வரை 30 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு அமலின்போது, அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், தினசரி பத்திரிகைகள், ஆம்புலன்ஸ், விவசாயிகளின் விளைபொருள்களை கொண்டு செல்லும் வாகனங்கள் போன்றவற்றிற்கு ஏதேனும் தடை ஏற்பட்டால் உதவி பெற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் தனிப்பிரிவு அலுவலக உதவி ஆய்வாளா் ராஜாசோ்வையை தொடா்புகொள்ளலாம்.

மேலும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலக தொலைபேசி எண்கள் 04324-296299, 9498100780 என்ற எண்களில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com