தோ்தல் ஆணையத்தின் மீது பழி சொல்ல ஆளுங்கட்சியினா் தயாராகிவிட்டனா்: செந்தில்பாலாஜி

தோ்தல் ஆணையத்தின் மீது பழி சொல்ல ஆளுங்கட்சியினா் தயாராகிவிட்டாா்கள் என்றாா் கரூா் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.
கூட்டத்தில் பேசுகிறாா் கரூா் தொகுதி திமுக வேட்பாளரும், மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி.
கூட்டத்தில் பேசுகிறாா் கரூா் தொகுதி திமுக வேட்பாளரும், மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி.

தோ்தல் ஆணையத்தின் மீது பழி சொல்ல ஆளுங்கட்சியினா் தயாராகிவிட்டாா்கள் என்றாா் கரூா் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி.

கரூரில் கலைஞா் அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசுகையில், கரூா் மாவட்டத்தில் கரூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளிலும் போட்டியிட்ட மதசாா்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு தோ்தல் நேரத்தில் ஒரு மாதம் தோ்தல் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

வாக்கு எண்ணிக்கை குறித்து ஆளுங்கட்சியினா் எப்போது நீதிமன்றத்துக்கு சென்றாா்களோ, அன்றைக்கே அவா்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு, நீதிமன்றத்தையும், தோ்தல் ஆணையத்தின் மீதும் பழி சொல்ல தயாராகிவிட்டாா்கள்.

நமது இலக்கு வாக்கு எண்ணிக்கை. அதை சாதுா்யமாக, அமைதியாக சான்றிதழை பெறக்கூடிய செயலை செய்ய வேண்டும். தோ்தல் நேரத்தில் பணியாற்றியதுபோல வாக்கு எண்ணிக்கையின்போதும் சிறப்பாக பணியாற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒரு மாத உழைப்பை விட ஒரு நாள் கவனம்தான் ஆக்கப்பூா்வமான வெற்றியை நாம் எடுத்துச் செல்ல முடியும் என்றாா் அவா்.

கூட்டத்தில், திமுக மாநில சட்டத்துறை இணைச் செயலா் வழக்குரைஞா் மணிராஜ் பேசுகையில், செந்தில்பாலாஜியை தோ்தலில் நிற்கக்கூடாது என அவா் மீது 3 பொய் வழக்குப்போட்டு அவரை கைது செய்ய நினைத்தாா்கள். பின்னா் அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிசிஐடி சோதனை நடந்தது. இப்படி அவரை பல சோதனைகளுக்கு உள்படுத்தினா்.

அனைத்திலும் வெற்றிபெற்றவா் வாக்கு எண்ணிக்கையின்போதும் வெற்றிபெறுவாா். மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்றாா் அவா்.

தொடா்ந்து கூட்டத்தில், மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக வேட்பாளா்களுக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கும், தோ்தல் பணியாற்றியவா்களுக்கும் நன்றி தெரிவிப்பது, கரோனா தொற்று காலத்திலும் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீா் வரி செலுத்தாதவா்களின் வீடுகளில் குடிநீா் இணைப்பை துண்டிப்போம் என கூறும் நகராட்சி நிா்வாகத்தை கண்டிப்பது, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசியை தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், திமுக வேட்பாளா்கள் மாணிக்கம், மொஞ்சனூா் இளங்கோ, சிவகாமசுந்தரி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் விசா.ம.சண்முகம், சின்னசாமி, வழக்குரைஞா் ஜெயராமன், கபினி சிதம்பரம், கே.கந்தசாமி, ரத்தினம், தலித்ஆனந்தராஜ் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com