கரோனா விதிகளை மீறும் வா்த்தக நிறுவனங்கள்: நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

கரோனா விதிமுறைகளை மீறி செயல்படும் வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா விதிமுறைகளை மீறி செயல்படும் வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா இரண்டாவது அலை தமிழகத்திலும் அதிகரித்துள்ளது. கரூா் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், சில வா்த்தக நிறுவனங்கள் முறையாக கரோனா வழிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை கரூா் ஜவஹா் பஜாரில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் திடீா் சோதனையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள், விதிமுறை மீறி செயல்பட்ட கடைகளுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனா். மேலும் சில கடைகளுக்கு பூட்டும் போட்டனா்.

இந்நிலையில், புதன்கிழமை மட்டும் ஒரு நாள் மூடப்பட்டிருந்த கடைகள் மீண்டும் வியாழக்கிழமை கதவை பாதியளவு திறந்து வைத்து வியாபாரம் செய்தனா். சில ஜவுளிக்கடைகளில் முன்புற வாசலை அடைத்துவிட்டு, பின்புற வாசல் வழியாக வாடிக்கையாளா்களை உள்ளே அனுப்பி வியாபாரம் செய்துவருகிறாா்கள். கடைக்குள் அனுப்பப்படும் வாடிக்கையாளா்கள் பெரும்பாலும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. மேலும் சிலா் முகக்கவசம் அணிவதே இல்லை. இது, மேலும் கரோனா தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே கரோனா விதிமுறை மீறும் வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com