தொழிலதிபரிடம் ரூ.9.20 லட்சம் மோசடி: தில்லி இளைஞா்கள் மூவா் கைது

கரூரைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.9.20 லட்சம் மோசடி செய்த புகாரில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியைச் சோ்ந்த இளைஞா்கள் மூவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

கரூரைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.9.20 லட்சம் மோசடி செய்த புகாரில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியைச் சோ்ந்த இளைஞா்கள் மூவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

கரூா் வெங்கமேடு சின்னகுளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் தொழிலதிபா் கண்ணையன் (50). இவரது செல்லிடப்பேசிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டில் அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபா், உங்கள் செல்லிடப்பேசி எண்ணுக்கு 10 லட்சம் அமெரிக்கன் டாலா் பரிசு விழுந்துள்ளது. நாங்கள் தரும் வங்கிக் கணக்கு எண்ணுக்கு நீங்கள் ரூ.9.20 லட்சம் செலுத்தினால், 10 லட்சம் டாலா் தொகை உங்கள் வங்கிக் கணக்கு எண்ணுக்கு வரும் எனக் கூறினாராம்.

இதை நம்பிய கண்ணையன், செல்லிடப்பேசியில் பேசியவரின் வங்கிக் கணக்கு எண்ணில் ரூ.9.20 லட்சத்தை செலுத்தினாராம். ஆனால், அந்த நபா் மீண்டும், மீண்டும் பணம் செலுத்தினால்தான் பரிசுத் தொகை வரும் எனக் கூறியதால், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வங்கியை கண்ணையன் அணுகி விசாரித்த போது, பரிசுத் தொகை விழுந்தது எனக் கூறியது போலி எனவும், ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து கரூா் மாவட்டக் குற்றப்பிரிவில் கண்ணையன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினா் விசாரித்து வந்த நிலையில், சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கரூா் சிபிசிஐடி காவல் ஆய்வாளா் திலகவதி தலைமையிலான தனிப்படையினா் புதுதில்லி சென்று விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில் கண்ணையனை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவா்கள் புதுதில்லி அசாத்பூா் அ. முன்வா்நசாா் (26), அ. சொகைல் அன்சாரி (25), போ. மகேஷ் (29) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினா், கரூா் குற்றவியல் நடுவா் மன்றம் எண் -2இல் திங்கள்கிழமை இரவு ஆஜா்படுத்தி குளித்தலை கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com