முதல்வருக்கு ஆக. 25ஆம் தேதிதபால் அனுப்பும் போராட்டம்: மாட்டுவண்டித் தொழிலாளா்கள் முடிவு
By DIN | Published On : 21st August 2021 01:22 AM | Last Updated : 21st August 2021 01:22 AM | அ+அ அ- |

தமிழக முதல்வருக்கு ஆக. 25-ஆம்தேதி தபால் அனுப்பும் போராட்டம் நடத்த மாட்டுவண்டித் தொழிலாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
கரூா் மாவட்ட மணல் மாட்டு வண்டித் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டக்குழு ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்டத் தலைவா் எம்.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. கட்டுமான சங்க மாநில துணைச் செயலாளா் சி.ஆா்.ராஜாமுகமது, மாவட்டத் தலைவா் ப.சரவணன் ஆகியோா் கூட்டத்தில் பேசினா்.
கூட்டத்தில், காவிரி, அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அரசு தடைவிதித்துள்ளதால் மாட்டு வண்டித்தொழிலாளா்கள் வேலையின்றி, அவதிக்குள்ளாகி வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதுபோல கரூா் மாவட்ட தொழிலாளா்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு மணல் குவாரிகளை திறக்க கரூா் மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 25-ஆம்தேதி தமிழக முதல்வருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.