கவுண்டம்பட்டி க. முத்துகுடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

அண்மையில் காலமான கவுண்டம்பட்டி க. முத்து குடும்பத்தினரை தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அண்மையில் காலமான கவுண்டம்பட்டி க. முத்து குடும்பத்தினரை தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், மொழிப்போா் தியாகியுமான கவுண்டம்பட்டி க. முத்து அண்மையில் காலமானாா்.

இந்நிலையில், அவரது இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்ற மின்சாரத்துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com