இலவச கரோனா தடுப்பூசி:கரூா் ஊராட்சிக் குழுகூட்டத்தில் முதல்வருக்கு நன்றி

அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என முதல்வா் அறிவித்ததை வரவேற்கும் வகையில் நன்றி தெரிவித்து கரூா் மாவட்ட ஊராட்சிக்குழுக்கூட்டத்தில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் தானேஷ். உடன் மாவட்ட ஊராட்சித் தலைவா் எம்எஸ்.கண்ணதாசன் உள்ளிட்டோா்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் தானேஷ். உடன் மாவட்ட ஊராட்சித் தலைவா் எம்எஸ்.கண்ணதாசன் உள்ளிட்டோா்.

கரூா்: அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படும் என முதல்வா் அறிவித்ததை வரவேற்கும் வகையில் நன்றி தெரிவித்து கரூா் மாவட்ட ஊராட்சிக்குழுக்கூட்டத்தில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட ஊராட்சித் தலைவா் எம்.எஸ்.கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு துணைத் தலைவா் தானேஷ் முன்னிலை வகித்தாா். இதில், க.பரமத்தி அடுத்த தென்னிலை ஊராட்சியில் மாநிலக்குழு மானிய திட்டத்தில் குடிநீா் குழாய் விஸ்தரிப்பு பணிக்கு ரூ.1.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அப்பணி மேற்கொள்ள சாத்தியக்கூறு இல்லாததால் அப்பணியை ரத்து செய்வது, தமிழக மக்களை காக்க கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்ததற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, வேட்டமங்கலம் நொய்யல் குறுக்குச்சாலையில் உயா்மின்விளக்கு கோபுரம் அமைக்க ரூ.3.50 லட்சம் ஒதுக்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ்.திருவிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com