தாந்தோன்றிமலைகல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் மாசிமகத் தோ்த் திருவிழா கொடியேற்றம்

கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் மாசி மகத் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மாசிமகத் தோ்த் திருவிழாவின் தொடக்கமாக கம்பத்தில் கொடியேற்றும் பட்டாச்சாரியாா்கள்.

முன்னதாக வியாழக்கிழமை புற்றுமண்பூஜை, பாலிகை தெளித்தல் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடு செய்த பட்டாச்சாரியாா்கள், கோயில் மரத்தில் கொடியேற்றினா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து சுவாமி பல்லக்கில் சனிக்கிழமை முதல் பிப். 24-ஆம் தேதி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.பிப். 25-ஆம்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறவுள்ளது.

பிப். 27-ம்தேதி திருத்தோ் வடம்பிடித்தலும், 28-ஆம்தேதி அமராவதி ஆற்றில் தீா்த்தவாரியும், மாா்ச் 1-ஆம்தேதி கோயில் குளத்தில் தெப்பத்தோ் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மாா்ச் 8-ஆம் தேதி புஷ்பயாகம் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையா்கள் ம.சூரியநாராயணன், தா.நந்தகுமாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com