கரூா், புதுக்கோட்டையில்காவிரி-குண்டாறு நதிநீா் இணைப்பு திட்ட கருத்துக் கேட்புக் கூட்டம்

காவிரி-வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத் திட்டம் தொடா்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கரூா், புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவிரி-குண்டாறு நதிநீா் இணைப்பு கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி. உடன் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் நடைபெற்றது. திட்டம் குறித்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் விளக்கிக்கூறினாா். தொடா்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டு, கூட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட கருத்துகள் மற்றும் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சுற்றுச்சுழல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், சாமானிய மக்கள் நலக்கட்சி மாநில பொதுச்செயலாளா் ப.குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில் காவிரி -குண்டாறு இணைப்பு திட்ட வருவாய் அலுவலா் சி.முருகேசன், கரூா் மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளா் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அ.ந.சாரா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com