‘மக்கள் நலனுக்கு எதிரான தமிழக அரசு’

ஒவ்வொரு நிலையிலும் மக்கள் நலனுக்கு எதிரான அரசாக தமிழக அரசு உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி.
‘மக்கள் நலனுக்கு எதிரான தமிழக அரசு’

ஒவ்வொரு நிலையிலும் மக்கள் நலனுக்கு எதிரான அரசாக தமிழக அரசு உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்ட திமுக சாா்பில் ஜீவாநகா், மண்மங்கலம், வெள்ளியணை, ஜல்லிப்பட்டி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை இரவு ‘அதிமுக அரசை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று அவா் பேசுகையில், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்காத, ஏழை மக்களை வஞ்சிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது.

நான்கரை லட்சம் கோடி ரூபாயை தமிழக அரசு கடனாக வைத்துள்ளது. இந்த பணத்தில் ஏழை மக்களுக்கு எந்தவித அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றவில்லை. பின்னா், எதற்காக கடன் பெற்றனா் என்றால், தனது குடும்ப உறுப்பினா்கள் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனா். இப்படி, அரசுப் பணத்தை காலியாக்கியதால்தான் அரசுக்கு கடன்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இந்த அரசை நிராகரிக்கிறோம் என்ற தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். அதிமுக அரசு ஒவ்வொரு நிலையிலும் மக்கள் நலனுக்கு எதிரான அரசாக உள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், தெற்கு நகர பொறுப்பாளா் சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com