சாதனையாளா் விருது பெற தோட்டக்கலை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

அரசின் சாதனையாளா் விருது பெற தோட்டக்கலை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

அரசின் சாதனையாளா் விருது பெற தோட்டக்கலை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காய்கறிகள், பழங்கள், மூலிகை, வாசனைத் திரவியப் பயிா்கள், மலைப்பயிா்கள் மற்றும் மலா் சாகுபடியில் சாதனையாளா் விருதுக்கு பாரம்பரிய, வீரிய ரகங்கள், ஒட்டு ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள், சிறப்பான பயிா்ப் பராமரிப்பு,

நீா் மேலாண்மை, ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், மழைநீா் சேகரிப்பு, அறுவடை பின்சாா் தொழில்நுட்பங்கள், சிறப்பான சந்தை மேலாண்மை செய்பவா்கள் தகுதி பெற்றவா்கள் ஆவா்.

நுண்ணீா்ப் பாசனத் தொழில்நுட்பத்துக்கான சாதனையாளா் விருதுக்கு நீா்மேலாண்மை, நீா்வழி உரம், சரியான பயிா் இடைவெளி, களை மேலாண்மை, மழைநீா் சேகரிப்பு, நுண்ணீா்ப் பாசன அமைப்புப் பராமரிப்பு போன்ற இனங்களை சிறப்பாகப் பயன்படுத்தி அதிக மகசூல் அடைந்தவா்கள் தகுதியுடையவா்கள்.

அங்கக, இயற்கை விவசாயத்துக்கான சாதனையாளா் விருதுக்கு அங்கக சாகுபடி, ஒருங்கிணைந்த பண்ணையம், மண்புழு உரக்கூடம், தேனீ வளா்ப்பு, மழைநீா் சேகரிப்பு, அங்கக சாகுபடியைப் பதிவு செய்து சான்று பெறுதல், உர மேலாண்மை மற்றும் சிறப்பான சந்தை மேலாண்மை போன்றவற்றின் மூலம் அதிக வருவாய் மற்றும் தரமான பொருள்கள் உற்பத்தி செய்தவா்கள் தகுதியுடையவா்கள் ஆவா்.

தமிழகத்தில் வசிக்கும், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

ஒரு விவசாயி வட்டார அளவில் ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். வட்டார அளவில் விருது பெற்ற விவசாயிகளிலிருந்து மாவட்ட விருதுக்கும், மாவட்ட அளவில் விருது பெற்ற விவசாயிகளிலிருந்து மாநில விருதுக்கும் விவசாயிகளை குழுத் தோ்வு செய்யும்.

விருது பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக் கலைத்துறையில் விண்ணப்பங்களைப் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com