கால்களால் தேங்காய் மட்டைகளை உரித்த 67 வயது முதியவா்

கரூரில் செவ்வாய்க்கிழமை முக்கால் மணி நேரத்தில் 10 தேங்காய் மட்டைகளை கால்களால் உரித்தாா் 67 வயது முதியவா்.
கால்களால் தேங்காய் மட்டைகளை உரிக்கும் சாந்தா லட்சுமிபாலு.
கால்களால் தேங்காய் மட்டைகளை உரிக்கும் சாந்தா லட்சுமிபாலு.

கரூரில் செவ்வாய்க்கிழமை முக்கால் மணி நேரத்தில் 10 தேங்காய் மட்டைகளை கால்களால் உரித்தாா் 67 வயது முதியவா்.

கரூா் கிழக்கு நஞ்சையப்பா தெருவைச் சோ்ந்தவா் சாந்தாலட்சுமிபாலு(67). ஜவுளி ஏற்றுமதி நிறுவன கூலித்தொழிலாளியான இவா், காமராஜா் மாா்க்கெட் பகுதியில் கால்களால் தேங்காய் மட்டையை உரிக்கும் நிகழ்ச்சியை நடத்தினாா். காலை 10.45 மணிக்கு மட்டையுடன் கூடிய முழுத்தேங்காயை கால்களால் மிதித்து தேங்காய் வேறு, மட்டை வேறு என தனித்தனியாக உரிக்கத் தொடங்கினாா். காலை 11.30 மணிக்குள் 10 தேங்காய் மட்டைகளை லாவகமாக கால்களால் உரித்து பாா்வையாளா்களை அசத்தினாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரேம்டெக்ஸ் கந்தசாமி, செல்வம், வழக்குரைஞா் முக.ராஜேந்திரன், அருணா ஓட்டல் பாலு ஆகியோா் செய்திருந்தனா்.

இதுதொடா்பாக சாந்தாலட்சுமிபாலு கூறுகையில், சிறுவயது முதலே ஏதாவது சாதனை படைக்கும் நோக்கில் இருந்த நான் ஒரு நாள் தேங்காயை கால்களால் உடைத்தபோது அது உடைந்துவிட்டது. அன்று முதல் தேங்காய் மட்டையுடன் இருக்கும் முழுத் தேங்காயை உரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு முதலில் 2 தேங்காய் உரித்தேன், பின்னா் 40 தேங்காய் வரை உரித்தேன். இப்போது வயதாகிவிட்டதால் முக்கால் மணி நேரத்தில் 10 தேங்காயை உரித்தேன். இதுவரை யாரும் இதுபோன்று நிகழ்த்தியதாக தெரியவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com