ஆட்சியரக வளாகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 13th July 2021 02:55 AM | Last Updated : 13th July 2021 02:55 AM | அ+அ அ- |

கரூா் ஆட்சியரக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியிடம் விசாரணை நடத்தும் காவல்துறையினா்.
கரூா்: கரூா் ஆட்சியரக வளாகத்தில் மூதாட்டி ஒருவா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்த பொருந்தலூரைச் சோ்ந்தவா் முத்துசாமி. இவரது மனைவி மாரியாயி (65). கூலித் தொழிலாளி. கடந்த 2005-ஆம் ஆண்டில் முத்துசாமி இறந்த நிலையில், தனது 2 மகள்களுடன் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில் மாரியாயின் உறவினா்களான திருச்சி உறையூரைச் சோ்ந்த தென்னூரான் உள்ளிட்டோா், கடந்த 2 ஆண்டுகளாக மாரியாயி உடனடியாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும். வீட்டுக்கு முன்புள்ள இடம் தங்களுக்குச் சொந்தம் எனக் கூறி மிரட்டி வந்தாா்களாம்.
இதுகுறித்து தோகைமலை காவல் நிலையத்திலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் மாரியாயி புகாரளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் விரக்தியடைந்த அவா், கரூா் ஆட்சியரக வளாத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயற்சித்தாா். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினா் மூதாட்டி மாரியாயியை மீட்டு, காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா்.