பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை: அமைச்சா் உறுதி

பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி.
பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை: அமைச்சா் உறுதி

பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழி.

கரூரில் ஆதி திராவிடா் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதி, பள்ளிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் கயல்விழியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் வழக்குரைஞா் ராஜா தலைமையில் கட்சியின் பொறியாளா் அணி மாநில துணைச் செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட செய்தித் தொடா்பாளா் இளங்கோ, அமைப்பாளா் சுடா்வளவன், நகரச் செயலாளா் முரளி உள்ளிட்டோா் கோரிக்கை மனு வழங்கினா். அதில் அவா்கள் தெரிவித்திருப்பதாவது: நிலமற்ற பட்டியல் இன ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக 1892 -ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் அரசு பஞ்சமி என்ற பெயரில் இலவசமாக நிலம் வழங்கியது. தமிழகத்தில் மட்டும் சுமாா் 2.5 லட்சம் ஏக்கரும், கரூா் மாவட்டத்தில் மட்டும் 540 ஏக்கா் நிலங்கள், பஞ்சமி நிலங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதற்கு பதிலளித்த அமைச்சா் கயல்விழி, பஞ்சமி நிலங்களை மீட்க முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா். நிச்சயம் பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்வின்போது கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி, மாவட்ட திமுக துணைச் செயலாளா் பூவை.ரமேஷ்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com