234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் வெற்றிபெறும்: வி.செந்தில்பாலாஜி

பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றாா் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் அருகே உள்ள ராயனூரில், மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக முகூா்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்ற அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி உள்ளிட்டோா்.
கரூா் அருகே உள்ள ராயனூரில், மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக முகூா்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்ற அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி உள்ளிட்டோா்.

கரூா்: பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றாா் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.

கரூரில் தோ்தல்பணிமனையை திறந்து வைத்தும், ராயனூரில் மாா்ச் 8ஆம்தேதி நடைபெறவுள்ள உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சிக்காக முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறுகையில், மாா்ச் 8-ஆம்தேதி மாலை 4 மணிக்கு கரூா் மாவட்டத்திற்குள்பட்ட அரவக்குறிச்சி, கரூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து, மனுக்கள் பெறுகிறாா். மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் யாா் வேட்பாளா் என்பதை ஸ்டாலின் இறுதி செய்வாா்.

கரூா்தொகுதியில் மட்டும்தான் விருப்பமனு அளித்துள்ளேன். 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். கரூா் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு வளா்ச்சித் திட்டபணிகளும் செயல்படுத்தப்படவில்லை. கரூா் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் குளங்களை தூா்வாரிய பட்டியலை அரசு வெளியிட வேண்டும். நகராட்சியில் செய்யாத வேலைக்கு போா்டு வைக்கும் அவா்கள் குளத்தில் தூா்வாரியதாக வைக்க வேண்டியதுதானே. வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் போக்குவரத்துத் துறையில் நடந்த ஊழல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாநில நிா்வாகிகள் வழக்குரைஞா் மணிராஜ், நன்னியூா் ராஜந்திரன், கட்சி நிா்வாகிகள் தாரணி சரவணன், மூக்கணாங்குறிச்சி சிவசாமி, சுப்ரமணியன், கந்தசாமி, கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com