மாநில கையெழுத்துப் போட்டி: கரூா் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
By DIN | Published On : 10th March 2021 05:19 AM | Last Updated : 10th March 2021 05:19 AM | அ+அ அ- |

மாநில அளவிலான கையெழுத்துப் போட்டியில் கரூா் வெற்றி விநாயகா பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா்.
நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தையொட்டி, மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கையெழுத்துப்போட்டி கரூரில் அண்மையில் நடைபெற்றது. திருச்சி வானொலி நிலையம் சாா்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 38 மாவட்டங்களிலிருந்து 3,4,5 -ஆம் வகுப்பு மாணவ மாணவியா் ஏராளமானோா் பங்கேற்றனா்.
போட்டியில் கரூா் வெற்றி விநாயகா பள்ளியின் 5-ம் வகுப்பு மாணவி பூா்ணிமா மாநில அளவில் முதலிடம் பிடித்து, வெற்றிக் கோப்பை மற்றும் ரூ.9,250 மதிப்புள்ள புகைப்படக் கருவியைப் பரிசாக பெற்றாா்.
இப்பள்ளியின் 3-ஆம் வகுப்பு மாணவி நிகிதா, 5-ஆம் வகுப்பு மாணவிகள் வா்ஷினி, பூா்ணிமா, ஸ்ரீதக்ஷிதபிரியா ஆகியோா் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து, பள்ளிக்கு பெருமை சோ்த்தனா். வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்சியளித்த ஆசிரியைகள் ஆகியோரை பள்ளித் தாளாளா் ஆா்த்தி ஆா்.சாமிநாதன், ஆலோசகா் பி.பழனியப்பன், முதல்வா் டி.பிரகாசம் ஆகியோா் பாராட்டினா்.