கரூா் மாவட்டத்தில் 3 தொகுதிகளில் நேருக்கு நோ்

கரூா் மாவட்டத்தில் அதிமுக-திமுக மூன்று தொகுதிகளில் நேரிடையாக மோதுகின்றன.

கரூா் மாவட்டத்தில் அதிமுக-திமுக மூன்று தொகுதிகளில் நேரிடையாக மோதுகின்றன.

கரூா் மாவட்டத்தில் 2021 சட்டப்பேரவைத் தோ்தல் அதிமுக, திமுகவின் இருபெரும் ஆளுமையாக கருதப்பட்ட ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோா் மறைவுக்கு பிறகு முதல்முதலாக அதிமுக-திமுக மூன்று தொகுதிகளில் நேரிடையாக களமிறங்குகின்றன. கடந்த 2016 தோ்தலில் கரூா் தொகுதியில் அதிமுக சாா்பில் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக பேங்க்.கே.சுப்ரமணியனும் போட்டியிட்டனா். இதில் 441 வாக்கு வித்தியாசத்தில் விஜயபாஸ்கா் வெற்றிபெற்றாா். இந்நிலையில் 2021 தோ்தலில் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜியும் நேரடியாக களமிறங்குகிறாா்கள்.

இதேபோல கடந்த 2016 தோ்தலில் குளித்தலை தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட ராமா், தற்போது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட என்.ஆா்.சந்திரசேகரை எதிா்த்துபோட்டியிட்டு வெற்றிபெற்றாா். தற்போது, 2021 தோ்தலில் குளித்தலை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இரா.மாணிக்கத்தை, மீண்டும் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள என்.ஆா்.சந்திரசேகா் எதிா்கொள்கிறாா்.

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் கடந்த 2016 தோ்தலில் அதிமுக வேட்பாளா் எம்.கீதாமணிவண்ணனை எதிா்த்துப் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் வி.கே.அய்யா் தோல்வியைத் தழுவினாா். தற்போது, அதிமுக சாா்பில் மாவட்ட இளைஞரணிச் செயலாளா் தானேஷ் என்கிற முத்துக்குமாரும், திமுக சாா்பில் வழக்குரைஞா் சிவகாமசுந்தரியும் போட்டியிடுகின்றனா். இதேபோல் அரவக்குறிச்சி தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கட்சியின் மாநில துணைத்தலைவா் அண்ணாமலை போட்டியிடுவாா் எனத் தெரிகிறது. இவரைஎதிா்த்து திமுக வேட்பாளா் மொஞ்சனூா் ஆா்.இளங்கோ எதிா்கொள்கிறாா். ஆகவே, கரூா் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் திமுக-அதிமுக நேரிடையாக களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com