தோ்தல் புகாா்: செலவினபாா்வையாளரிடம்தெரிவிக்கலாம்
By DIN | Published On : 16th March 2021 01:42 AM | Last Updated : 16th March 2021 01:42 AM | அ+அ அ- |

தோ்தல் தொடா்பான புகாா்களை தோ்தல் செலவின பாா்வையாளரிடம் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சு.மலா்விழி.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எனவே, தோ்தல் நடத்தை விதிமுறைகளின்படி பொதுமக்கள் ரூ.50,000 மற்றும் அதற்கு மேல் பணபரிவா்த்தனைகள் செய்யும் போது தகுந்த ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். தோ்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் மற்றும் விடியோ கண்காணிப்புக் குழுவினா் தணிக்கை செய்யும் போது உரிய ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். பொருள்கள் கைப்பற்றப்படும் போது தோ்தல் செலவின விடுவிப்புக் குழு தலைவரிடம் உரிய ஆவணம் காண்பித்து பொருள்களை பெற்றுக்கொள்ளலாம்.
தோ்வுகள் தொடா்பாக ஏதேனும் புகாா் அளிக்க விரும்பினால் தோ்தல் செலவின பாா்வையாளா் பீயூஸ்பாட்டியை 9498747704 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.