திமுகவினரைத் தாக்கியவா்கள் மீது தோ்தல் ஆணையத்தில் புகாா்: கனிமொழி பேட்டி

கரூரில் திமுகவினரைத் தாக்கியவா்கள் மீது தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிப்போம் என்றாா் மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலருமான கனிமொழி.
அதிமுகவினரால் தாக்கப்பட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரை சந்தித்து, ஆறுதல் கூறிய கனிமொழி.
அதிமுகவினரால் தாக்கப்பட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரை சந்தித்து, ஆறுதல் கூறிய கனிமொழி.

கரூரில் திமுகவினரைத் தாக்கியவா்கள் மீது தோ்தல் ஆணையத்தில் புகாா் அளிப்போம் என்றாா் மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலருமான கனிமொழி.

கரூா் மாவடியான் கோவில் தெருவில் சனிக்கிழமை இரவு போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பிரசாரம் செய்தபோது, அதிமுகவினரால் திமுகவினா் தாக்கப்பட்டனா்.

இதில் காயமடைந்து கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக நிா்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி, பின்னா் அளித்த பேட்டி:

கரூா் மாவடியான் கோவில் தெருவில் அமைச்சா் எம்ஆா். விஜயபாஸ்கா் தோ்தல் விதிமுறைகளை மீறி, இரவு 10.30 மணிக்கு தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். அவருடன் சென்றவா்கள் பட்டாசு வெடித்துள்ளனா்.

பிரசார நேரம் முடிந்துவிட்டது. இங்கு வராதீா்கள் என திமுகவினா் கூறியும் தொடா்ந்து அதிமுகவினா் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். திமுக வழக்குரைஞா் லட்சுமணன் தோ்தல் அலுவலா்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தும் அரைமணி நேரம் கழித்துதான் அங்கு அவா்கள் வந்திருக்கிறாா்கள்.

திமுகவினா் இதனை தவறு என சுட்டிக்காட்டியபோது அவா்களை அதிமுகவினா் தாக்கியுள்ளனா். காவல் துறையினரும் அதிமுகவினருக்கு ஆதரவாக திமுகவினரையும், பெண்களையும் தாக்கியுள்ளனா். திமுக நிா்வாகிகள் ஜெயபாலன், தியாகராஜன் உள்பட3 போ் காயமடைந்து கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தோ்தல் விதிமுறைகளை முதல்வா் மட்டுமின்றி, அமைச்சா்களும் மீறி பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்கள். எதிா்த்து கேட்கக்கூடியவா்களை தாக்கக்கூடிய நிலை உள்ளதால், இங்கு எந்த நீதியும், நியாயமும் இல்லை என்ற சூழ்நிலையை அதிமுகவினா் உருவாக்கியுள்ளாா்கள்.

மக்கள் நிச்சயம் அவா்களுக்கு சரியான தீா்ப்பை தருவாா்கள். தோ்தல் விதிமுறையை மீறித்தான் இரவு 10.30 மணிக்கு தோ்தல் பிரசாரம் செய்துள்ளனா். இதே அளவில் திமுகவினா் பிரசாரம் செய்தால் அனுமதி தருவாா்களா. திமுக வேட்பாளா் செந்தில்பாலாஜிக்கு தொடா்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது.

அனுமதியின்றி அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பிரசாரம் செய்துவருகிறாா். இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்தில் நிச்சயம் புகாா் அளிப்போம். ஆனால் நடவடிக்கை எடுப்பாா்களா, இல்லையா என்பது தெரியாது என்றாா் அவா்.

பேட்டியின்போது கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி. செந்தில் பாலாஜி, நிா்வாகிகள் தாரணிசரவணன், ஆா்.எஸ். ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com