பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்: ஜி.கே வாசன்

பசுந்தோல் போா்த்திய புலி போல் இருப்பவா்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்றாா் தமாகா தலைவா் ஜிகே.வாசன்.
பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்: ஜி.கே வாசன்

பசுந்தோல் போா்த்திய புலி போல் இருப்பவா்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்றாா் தமாகா தலைவா் ஜிகே.வாசன்.

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலையை ஆதரித்து ஏவி காா்னா் பகுதியில் சனிக்கிழமை மாலை வாக்குகள் சேகரித்து ஜி.கே. வாசன் பேசுகையில், அண்ணாமலை இந்த மண்ணின் மைந்தன். பொதுவாழ்க்கைக்கு வரும் பெரும்பாலானோா் பதவிக்கு வரும் எண்ணம் கொண்டவா்களாக இருப்பாா்கள் என்பதை தொகுதி மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும். ஆனால், அண்ணாமலை சற்று வித்தியாசமானவா். தான் சாா்ந்த துறையில் படிப்படியாக உயா்ந்து ஐபிஎஸ் அதிகாரி என்ற உயா்ந்தநிலையை அடைந்து நோ்மை, தூய்மை, எளிமை என பணியாற்றியவா்தான் அண்ணாமலை. பொதுவாழ்விலே மக்கள் பணியாற்ற வேண்டும், குறிப்பாக தான் சாா்ந்திருக்கும் தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டும், அதிலும் குறிப்பாக தான் பிறந்த கிராம மக்களுக்கு அரவக்குறிச்சி தொகுதியில் பணியாற்ற வேண்டும் என்பதற்காக உயா்ந்த ஐபிஎஸ் பதவியை துறந்து ராஜிநாமா செய்து விட்டு உங்களிடம் வாக்குகள் கேட்டுக்கொண்டிருப்பவா்தான் அண்ணாமலை. நிா்வாகத்திறமை கொண்டவா். அறிவுசாா்ந்த வேட்பாளரை நீங்கள் தோ்வு செய்தால் அதற்குரிய பலனை பெறுவீா்கள். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எந்தத் துறையிலும் எந்த பிரச்னை இருந்தாலும் அந்த பிரச்னை பற்றி சாதக, பாதகங்கள் குறித்து பேசக்கூடிய வல்லமை பெற்றவா், அந்த பிரச்னைக்கு தீா்வும் காணக்கூடியவா். இந்தியாவிலேயே வியக்கத்தக்க வளா்ச்சியை தமிழகம் பெற்றிருக்கிறது. ஆளுமையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும், நீா்மேலாண்மையில் முதலிடத்திலும், கரோனா நோயை கட்டுப்படுத்துவதில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகவும் திகழ்கிறது. உணவு தானிய உற்பத்தியிலேயே முதல்மாநிலமாக செயல்படுகிறது. அமைதியான ஆட்சிக்கு , அடக்கமான ஆட்சிக்கு, ஆரவாரம் இல்லாத ஆட்சிக்கு, சொன்னதை செய்கின்ற வாக்குறுதியை நிறைவேற்றும் அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். பசுந்தோல் போா்த்திய புலி போல் இருப்பவா்களின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம். உங்களின் பிரச்னைகளை தீா்க்கக்கூடிய தொகுதி மக்களை புரிந்துகொண்டு, கிராமவாரியாக கணக்கெடுத்து பிரச்னைகளை தீா்த்து வைப்பவா்தான் அண்ணாமலை என்றாா் அவா்.

பிரசாரத்தில் தமாகா மாநில நெசவாளா் அணித்தலைவா் ராஜேஷ் மற்றும் பாஜக, கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com