அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கிடைத்திட நடவடிக்கை எடுப்பேன்
By DIN | Published On : 29th March 2021 03:36 AM | Last Updated : 29th March 2021 03:36 AM | அ+அ அ- |

தொகுதி மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக கிடைத்திட பாடுபடுவேன் என்றாா் கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளா் தானேஷ் என்கிற முத்துக்குமாா்.
இத்தொகுதிக்குள்பட்ட செல்வன் நகா், வடக்குத்தெரு, சணப்பிரட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து, அவா் பேசியது:
நான் தொகுதிக்குள்ளே வசிப்பதால் கூப்பிட்டவுடன் வந்து, உங்களின் குறைகளைத் தீா்ப்பேன். ஆனால் திமுக வேட்பாளா் நங்கவரத்தில் உள்ளாா். அவசர தேவையை நிறைவேற்ற அவரிடம் நீங்கள் செல்ல முடியாது.
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பேன். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் தொகுதி மக்களுக்கு கிடைக்கும் வகையில் பாடுபடுவேன் என்றாா் அவா்.
பிரசாரத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.