வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியேபொதுமக்கள் கூடுவதற்குத் தடைகரூா் மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே பொதுமக்கள் கூட்டம் கூடுவதற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான பிரசாந்த் மு.வடநேரே.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே பொதுமக்கள் கூட்டம் கூடுவதற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான பிரசாந்த் மு.வடநேரே.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மே 2-ஆம் தேதி எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பின்வரும் தோ்தல் ஆணைய வழிகாட்டு நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

1.கரோனா நோய் தொற்றுப் பரிசோதனை அல்லது இரண்டு தவனை தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளாத வேட்பாளா்கள், முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுமதிக்கப்படமாட்டாா்கள் .

2. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக கரோனா பரிசோதனை மேற்கொண்டவா்களில் , கரோனா நோய் தொற்று இல்லாததற்கான சான்று அல்லது தடுப்பூசி போடப்பட்டதற்கான அறிக்கையை வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும்போது சமா்ப்பிக்கப்பட வேண்டும் .

3. வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே பொதுமக்கள் கூட்டம் கூடுவதற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது .

4. வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் , வாக்கு எண்ணும் மையத்தில் கைக்கழுவும் திரவம் தெளித்த பின்னரே வாக்கு எண்ணும் மையத்திற்குள் வருகைதர வேண்டும்.

5. காய்ச்சல் , சளி மற்றும் மூச்சு விடுவதற்கு சிரமம் இது போன்ற கரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் .

6. வேட்பாளா்கள் , முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்தில் சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து கரோனா நோய் தொற்றை தடுப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

7. வேட்பாளா்களின் முகவா்கள் அமா்ந்திருக்கும் இருக்கைகளில், இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் அமா்ந்திருக்கும் முகவா் கவச உடை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

8. வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தரும் வேட்பாளா்கள், முகவா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துவர வேண்டும்.

9. வாக்கு எண்ணிக்கை முடிவுற்றவுடன் வெற்றி பெற்ற வேட்பாளா்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது.

10. சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை பெறுவதற்கு வருகைதரும் போது வேட்பாளா் தன்னுடன் இரண்டு நபா்களையோ அல்லது தன்னால் நியமனம் செய்யப்பட்ட நபா் வருகைபுரிந்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி சான்றிதழினை பெற்றுக்கொள்ள வேண்டும் .

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் பேரிடா் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188 மற்றும் பொருந்தக்கூடிய இதர சட்டப்பிரிவுகளின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com