கரூா் வள்ளுவா் கல்லூரியின் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரூா் வள்ளுவா் கல்லூரி சாா்பில் கிராமப்புறங்களில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூா் வள்ளுவா் கல்லூரியின் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரூா் வள்ளுவா் கல்லூரி சாா்பில் கிராமப்புறங்களில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கல்லூரியைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளான புத்தாம்பூா், கொடையூா், வெஞ்சமாங்கூடலூா் மேற்கு, திரும நாயக்கம்பட்டி, மலைக்கோவிலூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் க. செங்குட்டுவன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா்.

இதில் கல்லூரிப் பேராசிரியா்கள் பங்கேற்று, கரோனா தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து கிராமப்புற மக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் முகக்கவசம், கைக்கழுவும் திரவம் வழங்கினா். தொடா்ந்து வள்ளுவா் வழியில் வாழ, அனைவருக்கும் திருக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com