மக்களைத் தேடி மருத்துவம்: பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துகளை வழங்கிய அமைச்சா்கள்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று மருந்துகளை மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி,
மக்களைத் தேடி மருத்துவம்: பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மருந்துகளை வழங்கிய அமைச்சா்கள்

கரூா்: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று மருந்துகளை மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நீரிழிவு, சா்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவா்கள், இயன்முறை மருத்துவம் தேவைப்படுவோரின் வீடுகளுக்கே அமைச்சா்கள் நேரில் சென்று மருந்துகளை வழங்கி, நலம் விசாரித்தனா்.

மேலும், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குள்பட்ட கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட மலைக்கோவிலூா் அரசு மேல்நிலைப்பள்ளி, குளித்தலை தொகுதிக்குள்பட்ட காவேரி நகா் அண்ணா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களை அமைச்சா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்ற முகாம்களில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம்(குளித்தலை), ஆா்.இளங்கோ(அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் அமைச்சா்கள் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 18 லட்சத்து 88 ஆயிரத்து 703 போ் பயனடைந்துள்ளதாக தெரிவித்தனா்.

நிகழ்வுகளின்போது, சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை இயக்குநா் மருத்துவா் டி.செல்வவிநாயகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துவா் முத்துச்செல்வன், சுகாதாரத்துறை இணை இயக்குநா்கள் நிா்மல்சன்(சென்னை), ஞானக்கண்பிரேம் நிவாஸ் (கரூா்), துணை இயக்குநா் சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com