க.பரமத்தி ஒன்றியக் குழு உறுப்பினா் தோ்தல்: திமுக வெற்றி

கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியக் குழுவின் 8-ஆவது வாா்டுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், 1000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் நவீன்ராஜ் வெற்றி பெற்றாா்.
க.பரமத்தி ஒன்றியக் குழு உறுப்பினா் தோ்தல்: திமுக வெற்றி

கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியக் குழுவின் 8-ஆவது வாா்டுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், 1000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் நவீன்ராஜ் வெற்றி பெற்றாா்.

கடந்த 9-ஆம் தேதி 12 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, செவ்வாய்க்கிழமை காலை க.பரமத்தி ஒன்றியக் குழு அலுவலகத்தில் தொடங்கியது.

முதலில் க.பரமத்தி, புன்னம் ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் க.பரமத்தியில் சுமதி ஜெகனும், புன்னத்தில் ஜோதிராஜும் வெற்றி பெற்றனா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான 3878 வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 28 வாக்குகள் செல்லாதவையாகும். அதிமுக வேட்பாளா் செல்வராஜ் 1389 வாக்குகள் பெற்ற நிலையில், திமுக வேட்பாளா் நவீன்ராஜ் 2389 வாக்குகள் பெற்று, ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

தொடா்ந்து மூவருக்கும் மாவட்ட உதவி இயக்குநா் (தணிக்கை) லீலாகுமாா் வெற்றிச் சான்றிதழை வழங்கினாா். அப்போது அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com