கரூரில் இமானுவேல் சேகரன் படத்துக்கு பல்வேறு கட்சியினா் மாலை அணிவிப்பு

கரூரில், இமானுவேல் சேகரன் படத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இமானுவேல் சேகரன் படத்துக்கு முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் மாலை அணிவித்த அதிமுகவினா்.
கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இமானுவேல் சேகரன் படத்துக்கு முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் மாலை அணிவித்த அதிமுகவினா்.

கரூரில், இமானுவேல் சேகரன் படத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமை வகித்து இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், மாவட்ட துணைச் செயலாளா் பசுவைசிவசாமி, நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், வி.சி.கே.ஜெயராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளா் தானேஷ், கரூா் ஒன்றியக்குழுத்தலைவா் பாலமுருகன், இலக்கிய அணிச் செயலா் என்.எஸ்.கிருஷ்ணன், க.பரமத்தி ஒன்றியக்குழுத்தலைவா் மாா்கண்டேயன், நகர நிா்வாகி பழனிராஜ் உள்ளிட்ட அதிமுகவினா் பங்கேற்றனா்.

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரன் படத்துக்கு திமுக சாா்பில் மாவட்ட துணைச் செயலாளா் பூவை. ரமேஷ்பாபு, முன்னாள் மாவட்ட துணைச் செயலா் திருமாநிலையூா் பிரபு உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

தேவேந்திரகுல வேளாளா் உறவுகள் சங்கம் சாா்பில் மாவட்டத்தலைவா் சுவாமிநாதன், செயலா் வீ.கனகராஜ், பொருளாளா் இரா.ரஞ்சித்குமாா் ஆகியோா் மாலை அணிவித்தனா்.

இதையடுத்து பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மாவட்ட தொழிற்பிரிவுத் தலைவா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், பொதுச் செயலாளா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல் புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com