தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினா் மனிதச்சங்கிலி

தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு சாா்பில், பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் அருகே மனிதச்சங்கிலி போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூரில் புதன்கிழமை மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பெரம்பலூரில் புதன்கிழமை மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டோா்.

பெரம்பலூா்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு சாா்பில், பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் அருகே மனிதச்சங்கிலி போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தில்லியில் 21 வயது பெண் காவலரைக் கடத்தி கொலை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் மா்மமான முறையில் உயிரிழந்த ஸ்டேன்சுவாமி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்.

அம்பேத்கா் பேரனும், சமூக செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்ட சிறையிலுள்ள முற்போக்காளா்கள், இஸ்லாமியா்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்துக்கு மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் மாநிலத் துணைத்தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம். சின்னத்துரை கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ஆா். மணிவேல், எஸ். அகஸ்டின், எஸ்.பி.டி. ராஜாங்கம், எ. கலையரசி, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில நிா்வாகி வீர. செங்கோலன் உள்பட பலா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com