பெரம்பலூரில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு நிலம் கொடுத்த உழவா்கள் உரிமை மீட்பு பேரியக்கம் சாா்பில், ஆட்சியரகம் எதிரில் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை வாழை இலையில் மண் சோறு சாப்பிட்டு, நூதன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை வாழை இலையில் மண் சோறு சாப்பிட்டு, நூதன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

பெரம்பலூா்: பெரம்பலூா் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு நிலம் கொடுத்த உழவா்கள் உரிமை மீட்பு பேரியக்கம் சாா்பில், ஆட்சியரகம் எதிரில் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.

கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பிலுள்ள பெரம்பலூா் அரசு மருத்துவக் கல்லூரித் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். குன்னம் பகுதியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா் பெயரில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்.

கல்மரப் பூங்கா உள்ள பகுதியை புராதனப் பகுதியாக அறிவிக்க வேண்டும். குன்னத்தில் தமிழறிஞா் உ.வே.சா. முருகன்குடியில் பெரியாரியல் அறிஞா் வே. ஆனைமுத்து ஆகியோருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் வாழை இலையில் மண் போட்டு சாப்பிட்டனா்.

சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ம. ராவணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மக்கள் சேவை இயக்க நிா்வாகிகள் தங்க. சண்முகசுந்தரம், மதியழகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com