கோயில் கட்டுமான பணிகளுக்கு டிஎன்பிஎல் ஆலை நிதியுதவி

நான்கு கோயில்களின் கட்டுமானப் பணிகளுக்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.95,000 நிதியுதவி வழங்கப்பட்டது.
கோயில் கட்டுமான பணிகளுக்கு டிஎன்பிஎல் ஆலை நிதியுதவி

நான்கு கோயில்களின் கட்டுமானப் பணிகளுக்கு டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.95,000 நிதியுதவி வழங்கப்பட்டது.

கரூா் மாவட்டம், புகழூா் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித்திட்டத்தின் கீழ் ஆலையைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களிலுள்ள கோயில் கட்டுமானப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஆலை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலை பொது மேலாளா் (மனிதவளம்) வி.ஜி.சுரேஷ், முதுநிலை மேலாளா் (மனிதவளம்) கே.எஸ்.சிவக்குமாா் ஆகியோா் தலைமை வகித்து, கரூா், மறவாபாளையம் மற்றும் கரியாம்பட்டி ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள 4 கோயில்களின் கட்டுமானப் பணிகளுக்கு ரூ.95,000 நிதியுதவிக்கான காசோலையை கோயில் திருப்பணிக் குழுவினரிடம் வழங்கினா். நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com