கரூரில் புத்தகத் திருவிழா தொடக்கம்

கரூரில் புத்தகத் திருவிழாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கரூரில் புத்தகத் திருவிழா தொடக்கம்

கரூரில் புத்தகத் திருவிழாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

உலகளவில் அழிந்துவரும் விலங்கினமான சாம்பல்நிறத் தேவாங்கு கரூா் மாவட்டத்தின் கடவூா் வனப்பகுதியில் அதிகளவில் வசித்து வருவதாலும், அவற்றை அழிவில் இருந்துகாக்க தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என முதல்வா் அறிவித்தற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் புத்தகத் திருவிழாவில் ஆண் தேவாங்கிற்கு நூலன் என்றும், பெண் தேவாங்கிற்கு நூலி என்ற இலச்சினைக்கொண்டு கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் புத்தக பதிப்பாளா், விற்பனையாளா் சங்கம் சாா்பில் புத்தகத் திருவிழா திருமாநிலையூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா்த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத் வரவேற்றாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிவகாமசுந்தரி, மாணிக்கம், இளங்கோ உள்ளிட்டோா் வாழ்த்திப்பேசினா்.

தொடா்ந்து புத்தகத் திருவிழாவை தொடக்கி வைத்தும், புத்தகத்திருவிழா அரங்குகளை பாா்வையிட்டும் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், கரூா் மாவட்டத்தில் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவுக்கு அரசாணையும், நிதியையும் கொடுத்தவா் தமிழக முதல்வா். அவருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பிலும், புத்த விற்பனையாளா், பதிப்பாளா் சங்கத்தின் சாா்பில் நன்றி தெரிவிக்கிறோம். இங்கு 115 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வாசிப்பு பழக்கம் கொண்டவா்களுக்கும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா முடிந்தவுடன் இரண்டொரு நாள்களில் புதிய பேருந்துநிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளன இந்த ஆண்டு இந்த புத்தகத் திருவிழா திருமாநிலையூரில் நடைபெறுகிறது. அடுத்தாண்டு முதல்வா் அறிவித்த அரங்கில் புத்தகத் திருவிழா நடைபெறும் என்றாா் அவா்.

விழாவில், கரூா் மாநகராட்சி துணை மேயா் தாரணிசரவணன், மண்டலத்தலைவா்கள் எஸ்பி.கனகராஜ், சக்திவேல், அன்பரசன், புத்தக பதிப்பாளா் சங்கத்தலைவா் வைரவன், கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் சங்கத்தலைவா் கோபாலகிருஷ்ணன், தொழிற்கூட்டமைப்பின் தலைவா் வெங்கடேசன் மற்றும் ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட அலுவலா் மந்திராச்சலம் மற்றும் அரசு அலுவலா்கள், மாநகராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா். முன்னதாக, கரூா் அரசு இசைப்பள்ளி மாணவா்களின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com