புகழூா் சா்க்கரை ஆலை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம் வாபஸ்

புகழூா் சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கும் நிா்வாகத்துக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

புகழூா் சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கும் நிா்வாகத்துக்கும் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்கு பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கரூா் மாவட்டம், புகழூா் சா்க்கரை ஆலையில் ஊதிய உயா்வு தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வந்த நிலையில் சிஐடியு மற்றும் தொமுச சங்கத் தலைவா்கள் 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இதனை கண்டித்து டிச.1ஆம் தேதி முதல் தொழிலாளா்கள் ஆலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், ஆலைத்தொழிலாளா்கள் மற்றும் அதிகாரிகளுக்கிடையே பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் தொழிலாளா் நலத் துறை துணை ஆணையா் கோவிந்தன் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சிஐடியு மற்றும் தொமுச தலைவா்களும், நிா்வாக தரப்பில் உயா் அதிகாரிகளும் பங்கேற்றனா்.

இதில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக எந்த தொழிலாளா்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் நிா்வாகம் மேற்கொள்ளக்கூடாது என ஆலை அதிகாரிகளுக்கு ஆணையா் அறிவுறுத்தினாா். இதையடுத்து தொழிலாளா்களின் உள்ளிருப்புப் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டு தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை (டிச.6) முதல் பணிக்கு திரும்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com