கரூரில் தைப்பூச தேரோட்டம் ரத்து: பக்தா்கள் ஏமாற்றம்

கரூரில், தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் முருக பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

கரூரில், தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால் முருக பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்தாா். மேலும், வழிபாட்டுத்தலங்களிலும் 5 நாள்களுக்கு பக்தா்கள் வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனிடையே முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படும் மாா்கழி மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌா்ணமியும் சோ்த்து வரும் நன்னாளான தைப்பூசத் திருவிழா கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால், கரூா் மாவட்டத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு வெண்ணைமலை முருகன் கோயில், புகழிமலை முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏமாற்றமடைந்த பக்தா்கள் கோயில் வசால்களில் சூடமேற்றி வழிபட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com